இரு தொகுதிகளின் வெற்றிகளை தளபதி கைகளில் ஒப்படைப்போம்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தாராபுரம் இனிமேல் விசிலின் கோட்டை என நிரூபித்து காட்டுகின்ற காலம்தான் வருகின்ற 6-ம் தேதி என்பதை மறந்து விடக்கூடாது.
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
Published on: 

தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார்.

அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் உள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டம் மேடைக்கு மதியம் 3.40 மணிக்கு வந்தடைந்தார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு சாலையில் நின்ற பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பிரசார பொதுக்கூட்ட இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

தவெக-வில் இணைந்த செம்மலை

அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் சேர்ந்த செம்மலையை த.வெ.க. துண்டு அணிந்து கட்சியில் இணைத்துக் கொண்டார். அமமுக கட்சியில் இருந்து வெற்றி பெற்ற மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜிம் முதலமைச்சர் விஜயை வரவேற்றார். மேலும், சமீபத்தில் அதிமுக-வில் இருந்து விலகி த.வெ.க.-வில் அமைந்து தலைவர்கள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர்.

மாலை 4 மணியளவில் முதலமைச்சர் விஜய் மேடை ஏறினார். அவர் குடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் பிரசார நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் வெற்றித் தளபதி கையில்தான் தமிழகத்தின் எதிர்காலத்தை மக்கள் ஒப்படைத்திருக்கிறார்கள். உங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். நாட்டின் விடிவெள்ளியாக திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை தளபதியின் செயலை பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். தாராபுரம் இனிமேல் விசிலின் கோட்டை என நிரூபித்து காட்டுகின்ற காலம்தான் வருகின்ற 6-ம் தேதி என்பதை மறந்து விடக்கூடாது.

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அனைவருடைய வேண்டுகோள். 147 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டத்திற்கான ஆணையை வழங்கும் நாளாக இந்த நாள் திகழ்ந்திடும். இந்திய நாடே வியக்கத்தக்க வகையில் இரு தொகுதிகளின் தீர்ப்பு அமையும். வெற்றித் தளபதி கைகளில் ஒப்படைப்போம் வெற்றியை ஒப்படைபோம்.

இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com