

வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து 2 குழந்தைகள் பலியாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூக்கனூரில் ஏரிக்கரையோரம் உள்ள வீட்டில் புஷ்பா மற்றும் அவரது மகள்கள் தேவதர்ஷினி (4), தேவஜனனி (2) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர்.
தூங்கிக்கொண்டிருந்த அவர்களை பாம்பு கடித்த நிலையில் புஷ்பா கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பாம்பு கடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்கள் 3 பேரையும் உடனடியான மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பலனின்றி சிறுமிகள் தேவதர்ஷினி, தேவஜனனி ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.
2 குழந்தைகள் பலியான நிலையில் தாய் புஷ்பா கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.