பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- த.வெ.க தலைவர் விஜய் புகழாரம்

அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்றார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- த.வெ.க தலைவர் விஜய் புகழாரம்
Published on

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு' என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com