அரசு பஸ்சை திடீரென இயக்கி பயணிகளை அலறவிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.

போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் அரசு பஸ்சை இயக்கும் போது அதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
அரசு பஸ்சை திடீரென இயக்கி பயணிகளை அலறவிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.
Published on: 
Summary

எம்.எல்.ஏ. அரசு பஸ்சை ஓட்டும்போது பஸ்சில் இருந்த பயணிகளும் கட்சியினரும் பீதி அடைந்தனர். எம்.எல்.ஏ. பஸ்சை ஓரமாக நிறுத்திய பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்தினை கலெக்டர் லீலா அலெக்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி ஆணையர் கேத்தரின் சரண்யா கே.வி. குப்பம் த.வெ.க. எம்.எல்.ஏ. தென்றல்குமார் உள்ளிட்டார் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம்

​அப்போது காஞ்சிபுரம் செல்ல இருந்த பஸ்சில் பயணித்த பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணச் சீட்டை கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் வழங்கினர்.

அப்போது திடீரென தென்றல் குமார் எம்.எல்.ஏ. பஸ்சின் டிரைவரை அவர் சீட்டில் இருந்து வெளியேறுமாறு கூறினார். எம்.எல்.ஏ அந்த பஸ் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு இதுதான் கிளட்சா, இதுதான் கியரா, என அருகே நின்றிருந்த தனது உதவியாளர்களிடம் கேட்டு அந்த பஸ்சை இயக்க தொடங்கினார்.

பஸ் நிலையம்

பஸ் நிலையத்தின் உள்ளே சிறிது தூரம் பஸ் செல்லும் போது திடீரேன பிரேக் அடித்தார். உடனே பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லாம் கத்தி கூச்சலிட்டனர். பயணிகள் அனைவருக்கும் மரண பயத்தை காட்டிய தென்றல்குமார் எம்.எல்.ஏ. சாமர்த்தியமாக அந்த பஸ்சை ஓட்டி சென்று வேலூர் புதிய பஸ் நிலையத்தை ஒரு சுற்றி வந்து ஒரு இடத்தில் நிறுத்தி வைத்தார்.

அரசு பஸ்

எம்.எல்.ஏ. அரசு பஸ்சை ஓட்டும்போது பஸ்சில் இருந்த பயணிகளும் கட்சியினரும் பீதி அடைந்தனர். எம்.எல்.ஏ. பஸ்சை ஓரமாக நிறுத்திய பிறகு தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தென்றல் குமார் எம்.எல்.ஏ.வுக்கு கனரக வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் உள்ளதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அரசு பஸ்சை அரசு டிரைவர் தானே இயங்க வேண்டும் இவர் எதற்காக இயக்கினார் என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

போக்குவரத்து அதிகாரிகள்

இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில் அரசு பஸ்சை இயக்கும் போது அதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். எம்.எல்.ஏ.விடம் கனகர வாகன லைசென்ஸ் உள்ளதா என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com