

சென்னை :
தெலுங்கு, கன்னட ஆண்டு பிறப்பான இன்று யுகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் யுகாதி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயும் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு, கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய யுகாதி திருநாள் வாழ்த்துகள்.
அனைவரிடமும் அன்பு, மகிழ்ச்சி, வளம், சகோதரத்துவம் தழைக்கப்பட்டும் என்று தெரிவித்துள்ளார்.