

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், கோவில் நிர்வாகத்தால் தயாரித்து விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக திருக்கோவில்களில் கோவில் நிர்வாகத்தின் மூலமாகவே பிரசாரத்தை தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்தை இன்று பார்வையிட்டோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. தற்போது தவெக ஆட்சியில் தேவைக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
த.வெ.க. அரசு விமர்சனத்திற்கு அஞ்சும் அரசு அல்ல , புதியதாக கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்து 50 ஆண்டுகால கட்சியைச் சார்ந்தவர்கள் எழுப்பக் கூடிய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி வருகிறோம்.
ஆனால் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் எங்கள் மீது ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசுவோர் மீது கைது நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.