ரவுடி கொலையில் கைதான த.வெ.க. பெண் நிர்வாகி அதிரடி நீக்கம்- கட்சி தலைமை நடவடிக்கை

சுரேஷ் கொலை வழக்கில் அவரது 13 வயது மகனும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பாரதி
Published on: 
Summary

கணவரை கொன்றதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட த.வெ.க. மகளிரணி இணை அமைப்பாளர் பாரதி, கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். சுரேஷ் கொலை வழக்கில் அவரது 13 வயது மகனும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற சுரேஷ் (வயது43). இவரது மனைவி பாரதி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

சுரேஷ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் அவரது பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. மனைவி பாரதி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட த.வெ.க. மகளிரணி இணை அமைப்பாளராக இருந்தார்.

பிரேத பரிசோதனை

​இந்நிலையில், கடந்த 23-ந்தேதி சுரேஷ் வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அவரது மனைவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுரேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

அதில் சுரேஷ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. சுரேசை அவரது மனைவியே, கொன்றுவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. கணவர் ​சுரேஷ் ஆபாச படங்களை காண்பித்து தொடர்ந்து துன்புறுத்தியதால், தன்னை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கியதில் அவர் இறந்ததாக பாரதி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து பாரதியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பாரதி மீது கொலைக்கு சம்மந்தமில்லாத மரணத்தை விளைவிக்கும் பிரிவான பி.என்.எஸ். 105 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுரேஷ் கொலை வழக்கில் அவரது 13 வயது மகனும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் த.வெ.க. மகளிரணி இணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து பாரதி நீக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை த.வெ.க. தலைமை கழக அலுவலகம் பிறப்பித்து உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com