அமைச்சர் ஆதவ் விட்ட சவால்... சட்டசபையில் வெடித்த வார்த்தை மோதல்

யாரும் யாருக்கும் அடிமையில்லை, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிந்துவிடும். தேர்தல் முடிவுக்குப்பின் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என அமைச்சர் ஆதவ் கூறினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Published on
Summary

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் என்றார்.

தமிழக சட்டசபையில், அடுத்த தேர்தலில் திமுக தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்று காட்டுங்கள். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட அமர்ந்திருக்க முடியாது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தி.மு.க.வால் காங்கிரஸ் வென்றது என்றும், காங்கிரஸ் தயவால் தி.மு.க. வென்றது என்றும் 2 கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பதில் அளித்த தி.மு.க. எம்.எல்.ஏ.கோவி. செழியன், பூஜ்யத்தில் இருந்து வந்தது தி.மு.க. எதையும் எதிர்கொள்ள தி.மு.க. தயார் என்று கூறினார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என்.நேரு கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால் தான் த.வெ.க. இன்று ஆட்சியில் இருக்கிறது. உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள். கூட்டணி கட்சிகளை வெளியே அனுப்பி விட்டு தனியா நின்று ஆட்சி நடத்துங்கள் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ், யாரும் யாருக்கும் அடிமையில்லை, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிந்துவிடும். தேர்தல் முடிவுக்குப்பின் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்றார்.

இதையடுத்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட், 2024-ல் தி.மு.க.விற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என கூறினார்.

தி.மு.க. எம்.எல்.ஏ கே.என்.நேரு பேசுகையில், எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது தி.மு.க., ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது தி.மு.க. என்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை திமுக ஆதரித்தது என்றார்.

இதற்கிடையே பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது, வேறு விவாதங்கள் வேண்டாம் என்றார்.

இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com