

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக கூட்டணி கட்சி கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது.
தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில், தமிழக வெற்றிழகம் (தவெக) ஆதரவுத் தலைவர்களின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், இதைத்தேர்தல் தொடர்பாக தவெக கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் விஜய் 2ம் கட்டமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், தாரகை கத்பர்ட் மற்றும் பிரவின் சக்ரவர்த்தில் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
விசிக சார்பில் தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ, ஐயுஎம்எல் கட்சி சார்பில் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.