“இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்” - மாணிக்கம் தாகூர்!

தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
“இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்” - மாணிக்கம் தாகூர்!
Published on

தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தவெக, விசிக, மதிமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த பெயர் அறிவிப்பு வெளியானது.

இந்த கூட்டணிப் பெயர் அறிவிப்பைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மாணிக்கம் தாகூர், திருமாவளவன், வைகோ, காதர் மொய்தீன், தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்.,

“இக்கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும். இடைத்தேர்தலுக்கான இக்கூட்டணியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்.

இடைத்தேர்தல் வெற்றிக்காக கூட்டணி கட்சிகள் இணைந்து பாடுபடும். சமூக நீதி, மதச்சார்பற்ற அடிப்படையில் தமிழ்நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி இது.

இந்தக் கூட்டணியின் தலைவர் விஜய். இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். தவெகவில் எம்.பி.க்கள் வந்தபின் அவர்களும் இந்தியா கூட்டணியில் இணைவார்கள்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com