தமிழ்நாட்டில் 25 ஆண்டுக்களுக்கு பிறகு பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி தவெக வெற்றி - மாணிக்கம் தாகூர்

கடந்த 4 மாதங்களாக மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும்.
Manickam Tagore
Published on: 

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் மக்களின் பேராதரவோடு அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

இடைத்தேர்தல், தவெக வெற்றி

கடந்த 4 மாதங்களாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும். த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்துவிட்ட அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இந்த இடைத் தேர்தல் வெற்றி என்பது முதலமைச்சர் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி வெற்றி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவை தமிழக மக்களின் பிரதிபலிப்பாக கருத வேண்டும். தமிழ்நாட்டில் 25 ஆண்டுக்களுக்கு பிறகு ஒரு இடைத் தேர்தலுக்கு பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, இடைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிற முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

என்று தெரிவித்துள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com