கும்மிடிப்பூண்டியில் சிக்னல் கோளாறு: புறநகர் மற்றும் விரைவு ரெயில் சேவையில் பாதிப்பு!

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 4-வது நடைமேடைகளுக்கான தண்டவாளப் பகுதியில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
ரெயில் சேவையில் பாதிப்பு
ரெயில் சேவையில் பாதிப்பு
Published on
Summary

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சிக்னல் பழுது காரணமாக, சென்னை மார்க்கமாக இயங்கும் புறநகர் மற்றும் விரைவு ரெயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 4-வது நடைமேடைகளுக்கான தண்டவாளப் பகுதியில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த வழியாகச் செல்லும் ரெயில்களை மாற்று பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, அனைத்து ரெயில்களும் முதல் நடைமேடை வழியாக மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விரைவு மற்றும் மின்சார ரெயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பணிக்கு, கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் ரெயில்கள் தாமதமாக இயங்கப்படுவதால் சென்னை நோக்கி வரும் பயணிகள் மற்றும் மாணவர்கள் ரெயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர். சிக்னல் பழுதுபார்க்கும் பணியில் ரெயில்வே துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் சேவை முழுமையாகச் சீரமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com