மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நாளை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்
Published on: 
Summary

போக்குவரத்தை தவிர்க்கும் வகையில் முன் ஏற்பாடாக தற்போது அப்பகுதிகளில் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

கானத்துார்-மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை “சென்னை சைக்ளோத்தான்” போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை தமிழக மேம்பாட்டு ஆணையம் மற்றும் எச்.சி.எல்., நிறுவனம் இணைந்து நடத்துகிறது.

கடற்கரை சாலை

இதில், மாவட்ட, மாநிலங்கள் அளவிலான பல்வேறு பகுதிகளை சேர்ந்த சைக்கிளிங் வீரர்கள், பங்கேற்கின்றனர். இப்போட்டி கானத்துார் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கி மாமல்லபுரம் புறவழி சந்திப்பு வரை நடக்கிறது. இதனால் கானத்துார் மாமல்லபுரம் இடையே நாளை அதிகாலை 4:30 மணி முதல் பகல் 10:30 வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் சாலை

சென்னையில் இருந்து, புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்கள், புதுச்சேரியில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக, மாற்று பாதையில் செல்ல வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். போக்குவரத்தை தவிர்க்கும் வகையில் முன் ஏற்பாடாக தற்போது அப்பகுதிகளில் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com