திருவள்ளூரில் டீசல் இல்லாமல் நடுவழியில் நின்ற லாரியால் போக்குவரத்து நெரிசல்

நடுவழியில் நின்ற லாரியால் காலை 8 மணி முதல் 9 மணி வரை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நடுவழியில் நின்ற லாரியால் போக்குவரத்து நெரிசல்
நடுவழியில் நின்ற லாரியால் போக்குவரத்து நெரிசல்
Published on: 
Summary

திருவள்ளூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிய லாரி ஒன்று திருவள்ளூர் நோக்கி இன்று காலை வந்தது. லாரியை ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் ஆறுமுகம் ஓட்டினார்.

இன்று காலை 8 மணியளவில் திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையான ஜெ.என்.சாலையில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு வந்தபோது லாரியில் டீசல் இல்லாததால் நடுவழியில் நின்றது.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதி அடைந்தனர்.

வாகன நெரிசல்

இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஆட்டோ, கார் மற்றும் பஸ்கள் வாகன நெரிசலில் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து வேறோரு டாரஸ் லாரியை கொண்டு வந்து டீசல் இல்லாமல் நின்ற லாரி இழுத்து சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தினர்.

நடுவழியில் நின்ற லாரியால் காலை 8 மணி முதல் 9 மணி வரை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொதுமக்கள்

திருவள்ளூர் நகர் பகுயில் காலை மாலை வேளைகளில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு உள்ளது. ஆனால் தினந்தோறும் தடை செய்யப்பட்ட நேரத்தில் 100 மேற்பட்ட கனரக வாகனங்கள் திருவள்ளூர் நகருக்குள் நுழைவதை போலீசார் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருவள்ளூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X