சுகாதாரத்தை மேம்படுத்த வணிகர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்- ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை

தமிழகத்தின் சுத்தம், சுகாதாரத்தையும், நோயற்ற வாழ்வையும் உறுதி செய்திட வணிக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சுகாதாரத்தை மேம்படுத்த வணிகர்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்- ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை
Published on
Summary

தொடர் காய்ச்சல், இருமல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி ஆலோசனைகள் பெற்றிட வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல், டைபாய்டு, மஞ்சள் காமாலை நோய்கள் வேகமாக பரவி வருவது செய்திகள், ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகிறது.

பொறுப்புமிக்க குடிமக்களாக அரசுக்கு உதவும் வணிகர்களாக நமது இல்லம், வணிக வளாகம், சுற்றுப்புறத்தை சுத்தமாக, சுகாதாரமாக மழைநீர், கழிவுநீர் தேங்கி விடாமல் குப்பைகளை அகற்றி அரசுக்கும் மாநகராட்சிக்கும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். நமது மண், நமது மக்கள், நமது இல்லம், நமது வணிகம், நமது நலம், நமது வளம் எனும் சீரிய தொலைநோக்கு சிந்தனையோடு, பேரமைப்பு வணிகர்களும், வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பரத் தட்டிகளை தங்களின் கடைகளில் வைத்து தமிழகத்தின் சுத்தம், சுகாதாரத்தையும், நோயற்ற வாழ்வையும் உறுதி செய்திட வணிக சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும், தொடர் காய்ச்சல், இருமல் நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி ஆலோசனைகள் பெற்றிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com