கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on: 
Summary

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளாக காணப்பட்டனர்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு 2 சீசன் காலங்கள் உண்டு. நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இன்னொன்று ஏப்ரல் மே மாதங்களில் வரும் கோடை விடுமுறை சீசன் காலம் ஆகும்.

சுற்றுலா பயணிகள்

இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் மற்றும் கோடை விடுமுறை சீசன் இல்லாத மற்ற காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும், பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. குறிப்பாக கேரளம் மாநிலம் மற்றும் வடமாநி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

கிழக்கு வாசல் கடற்கரை

நேற்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும், திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.

ஆனால் மழையின் காரணமாக நேற்று சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் கன்னியாகுமரி கடலில் ஏராளமானோர் ஆனந்த குளியல் போட்டனர்.

கன்னியாகுமரி கடல்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில்சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

சுமார் 3 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு

மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர். கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.

கண்ணாடி கூண்டு பாலம்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கு இடையே கண்ணாடி கூண்டு பாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் நடந்து சென்று பார்வையிட்டனர்.

மேலும் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், சுதந்தி போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

இன்றும் விடுமுறை

என்பதால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளாக காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.

X