தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக அதிகரிப்பு - சிஏஜி அறிக்கை

போக்குவரத்து கழக கடன் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது.தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக அதிகரிப்பு - சிஏஜி அறிக்கை
Published on

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதன்மை கணக்காய்வு துறைத் தலைவர் ஜெய்சங்கர் சிஏஜி அறிக்கையை வெளியிட்டார்.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் 2017க்கு முன்பாக இருந்த கடனைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து ஊழியர்களின் செலவினம் மட்டும் 55.20% முதல் 63.55 % வரை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில நிதிநிலை (ஏப்.2022 முதல் மார்ச் 2023 வரை) மீதான சிஏஜி அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

2022-23 நிதியாண்டில் தேசிய தனிநபர் GDP-ஐ விட, தமிழ்நாட்டின் தனிநபர் GDP அதிகமாக உள்ளது. CAG அறிக்கை தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் (GDP) தேசிய சராசரி ₹1,96,983 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டின் சராசரி ₹3,08,020 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் 2021-2022ல் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2022-2023ல் 36,215 கோடியாக குறைந்துள்ளது. ஆகவே முந்தைய ஆண்டின் வருவாய் வரவுகளை விட 2022-2023ல் 17% வருவாய் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) - ரூ.23.64 லட்சம் கோடியாகவும் வரி வருவாய் - ரூ.1.88 லட்சம் கோடியாகவும் மொத்த வருவாய் - ரூ.2.43 லட்சம் கோடியாகவும் GSDP வளர்ச்சி - 14.16% ஆகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் கடன் கட்டுக்குள் உள்ளது. தனிநபர் GDPல் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக உள்ளது

மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்துவதில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை கீழ் இயங்கும் இயக்குநரகங்களில் 28% காலிப்பணியிடங்கள் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com