

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (19.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, காரணை, ஏகாட்டூர், ஓஎம்ஆர், படுப்பாக்கம், சிப்காட் சிறுசேரி, எழில்முக நகர், ஜவஹர் நகர், காந்தி நகர், ஒலிம்பியா, சந்தியா கார்டன்.