Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 30 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Tamil News Live
இன்றைய முக்கியச் செய்திகள்

3 ஃபைல்களை நீ அவிழு, நானும் அவிழ்க்கிறேன்: நான் மோசமான ஆளு- ஆர்.எஸ். பாரதி

* திமுக-வை பார்த்து சவால் விடுகிறார் விஜய். கோப்புகள் எல்லாம் ரெடியா இருக்கு, டேபிளில் இருக்கிறது. நான் அவிழ்த்தால் என்ன ஆகும் என்று சட்டசபையில் சொல்கிறார்.

* ஒன்றும் தெரியாதவர்கள்தான் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருக்கிறார்கள்.

என்னை கொன்று விடுவார்கள் என்று கதறிய கர்ப்பிணி - பிரசவத்திற்கு பின்பு தாயும், குழந்தையும் உயிரிழந்த சோகம்...

* அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் உயிரிழப்பு.

* அரசு மருத்துவமனை ஊழியர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என கர்ப்பிணி கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது: மோகன் பகவத்...

* இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று நினைப்பவர் உண்மையான இந்துவாக இருக்க முடியாது.

* ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த கண்ணியம் உண்டு, நமக்கிடையே எந்த அடிப்படை வேறுபாடும் இல்லை.

நேபாள வெள்ளம்: இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 97 வயது மூதாட்டி- போர் வீரனை போல் காட்சியளித்ததாக பேரன் உருக்கம்...

* நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 97 வயதான மூதாட்டி ஒருவரை மீட்பு படையினர் மீட்டனர்.

* அந்த மூதாட்டியை கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கு நேபாள ராணுவத்திற்கு சுமார் நான்கு மணி நேரம் ஆனது.

தமிழக கவர்னராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்பு

* தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கவர்னர்கள் புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்

* கிரண் குமார் ரெட்டி 2010 முதல் 2014 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com