மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்

இவர் கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர என பல பரிமாணங்கள் கொண்டவர்.
bharathiyar
Published on
Summary

விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

தனது பதினொன்றாம் வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.

நினைவு நாள்

இவர் தனது 39-ம் வயதில் 1921-ம் வருடம் செப்டம்பர் மாதம் 11-ம் நாள் மறைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ம் தேதி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாரதியாரின் சிலைகள் மற்றும் உருவப் படங்களுக்கு பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாகவி நாள்

இந்த நாளை 'மகாகவி நாள்' என கடைப்பிடிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com