TNTET | ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு தேதி வெளியானது

இரண்டாம் கட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் அறிக்கை வெளியாகியுள்ளது.
TNTET Exam Dates Announced
Published on: 
Summary

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு நடைபெறும் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதி பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து பணிபுரிந்து வர வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதி

இந்த தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 27.10.2026 முதல் 19.11.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெட் முதல் தாளுக்கான தேர்வு 20.12.2026 மதியம் நடைபெறும் என்றும், டெட் இரண்டாம் தாளுக்கான தேர்வு 20.12.2026 காலை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com