வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சரின் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பதில்..!

த.வெ.க. அமைச்சர்கள் பலர் முதலமைச்சர் விஜய் பிரதர் ஆவார் என மேடைகளில் பேசி வருகின்றனர்.
மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
Published on

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி வயதுக்கு மரியாதை கொடுத்து அன்பாக சொல்கிறேன், அவர் முதலமைச்சராக இருக்கும்போதுதான் நீட் வந்தது. அவர் முதலமைச்சராக இருக்கும்போதுதான் ஒரு மாணவியின் தற்கொலை நடைபெற்றது. நீட் நடத்தப்படக் கூடாது என்று அப்போதே சொல்லியிருக்கலாம்.

ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்தில் நீட் நடைபெறாது

2019 தேர்தலுக்கு முன்னதாக நீட் நடத்தக் கூடாது என்று பிரதமர் மோடியிடமும், அமித் ஷாவிடமும் கண்டிசன் போட்டிருந்தால் அவர்கள் நீட்டை ரத்து செய்து இருப்பார்கள். அந்த தைரியம் கிடையாது. பழியை மட்டும் காங்கிரஸ் மீது போடுவது. இப்போதும் சொல்கிறோம், ராகுல் காந்தி பிரதமாக பதவி ஏற்றவுடன் போடப்போகும் முதல் கையெழுத்துகளில் ஒன்று தமிழகத்தில் நீட் நடைபெறாது என்பதுதான்.

விஜய் பிரதமராக வேண்டும் என்று த.வெ.க. அமைச்சர்கள் சிலர் சொல்கிறார்கள். அவர்கள் இன்னும் ரசிகர் மன்ற Mode-ல் உள்ளனர். அதை மாற்ற முடியாது.

இந்தியாவின் சூழ்நிலை எப்படி உள்ளது என்று இந்தியாவுக்கே தெரியும். பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஒவ்வொரு எதிர்க்கட்சிகளின் அதிகாரங்களை பிடுங்குவதிலும், அமலாக்கததுறை மற்றும் சி.பி.ஐ. பயன்படுத்திவதிலும், கட்சிகளை உடைப்பதிலும், ஜனநாயத்தை இல்லாமல் ஆக்குவதும், தொகுதி மறுவரையறையை கொண்டு வந்து எங்கெல்லாம் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் விழுந்ததோ, அதையெல்லாம் தொகுதியாக்க முயற்சிக்கிறது பாஜக.

எங்களுடைய Mode வேற

அதற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அவர்களுடைய Mode வேற. எங்களுடைய Mode வேற. ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் இடையிலான தண்ணீர் பிரச்சினை, ஒரு மாவட்டம் மற்றொரு மாவட்டத்துக்கும் இடையிலான தண்ணீர் பிரச்சனைக்கே நீதிமன்றத்திற்கு செல்கிறோம்.

காவிரி ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்குமான பிரச்சினை. எங்களை பொறுத்தமட்டில் நாங்கள் தமிழ்நாடு காங்கிரசை சேர்ந்தவர்கள். எங்களுடைய நிலை மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்கக் கூடாது. நாங்கள் இருக்கும் வரைக்கும் வைக்க விடமாட்டோம். இதுதான் எங்களுடைய நிலை.

மேகதாது தமிழகத்திற்கு விரோதமானது

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் முதல் தற்போதைய முதல்வர்கள் வரை அவர்களுடைய எண்ணம் மேகதாது கட்டுவது. இதற்கு முக்கிய பொறுப்பு மத்திய அரசு கையில் உள்ளது. அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால் மேகதாது கட்ட முடியாது. மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம். டி.கே. சிவக்குமார் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வந்து விடும் என்று சொல்வது எல்லாம் கதை. அதை நம்பக்கூடாது. மேகதாது தமிழகத்திற்கு விரோதமானது. தமிழக காங்கிரஸ் அதை எதிர்ப்போம்.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

மேலும், தவெக-வின் 100 நாட்கள் ஆட்சி சாதனை விளக்கம் கூட்டத்தில் அமைச்ரச் ஜெகதீஸ்வரி பேசும்போது "தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் விஜய், வருங்கால பிரதமர்" எனக் கூறியிருந்தார்.

இது குறித்து மாணிக்கம் தாகூரிடம் கேட்கப்பட்டதற்கு "காங்கிரஸ் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சர்... அது த.வெ.க அமைச்சர்களுக்கும் தெரியும். த.வெ.க.வினர் இன்னும் ரசிகர் மன்ற Mode-ல் உள்ளனர்.

டெல்லிக்கு போனாலும் தளபதி விஜய் பத்திதான் பேச்சு. ஏன் நாளைக்கு அந்த டெல்லியே அவரோடதா கூட ஆகலாம் என்று அமைச்சர் ஸ்ரீநாத் பேசியிருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com