தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் விடுப்பு.தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியீடு.
தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு
Published on

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று வருவதால், மறுநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com