மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய்: பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது

மதுரை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய்
மீனாட்சி அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய்
Published on: 

த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மதுரை அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

மதியம் அவுட்போஸ்டில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற முதல்-அமைச்சர் விஜய் மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன்பின் மாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டார்.

சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு வாகனம் மூலம் வந்தார். அப்போது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் கோவில் வளாகம் அருகே வந்தபின்னர், நடந்து கோவில் வாசலை அடைந்தார். அப்போது, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், கோவிலில் உள்ள பொற்தாமரை குலத்தை பார்வையிடுகிறார். அதன்பின் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய இருக்கிறார்.

கடந்த 17-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்கான அவர் அப்போது பங்கேற்கவில்லை. இந்த நிலையில் தற்போது சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com