கூட்டணி கட்சி MLA-க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை

இடைத்தோ்தலில் த.வெ.க. வென்றதை தொடா்ந்து அந்த எண்ணிக்கை 109-ஆக அதிகரித்தது.
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
Published on: 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (நவ. 23) கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து 6 மாதங்கள் நிறைவடைந்தது.

சட்டசபையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாம் என்று செய்திகள் வெளியாகும் நிலையில், முதலமைச்சர் விஜய் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வா் விஜய்யின் முகாம் அலுவலகமான பாமணி இல்லத்தில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகலில் இந்த கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., ஐ.யூ.எம்.எல். கட்சிகளை சோ்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

சட்டசபையில் த.வெ.க. பலம்:

2026-இல் நடைபெற்ற சட்டபேரவை தோ்தலில் த.வெ.க.வுக்கு 108 இடங்கள் கிடைத்தன. அதில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் த.வெ.க. பலம் 107-ஆக குறைந்தது. அதன் பின்னா் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் த.வெ.க. வென்றதை தொடா்ந்து அந்த எண்ணிக்கை 109-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், கொளத்தூா் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு சமீபத்தில் உயிரிழந்தாா். இதனால் த.வெ.க. எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை தற்போது 108-ஆக உள்ளது. இதனிடையே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துவிட்டதை கருத்தில் கொண்டு, பேரவையில் பல்வேறு விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பலாம் என்று கூறப்படுகிறது.

முக்கிய ஆலோசனை:

மேலும், நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த சூழலில்தான் கூட்டணி கட்சி உறுப்பினா்களுடான கூட்டத்துக்கு முதல்வா் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கெனவே, த.வெ.க. எம்.எல்.ஏ.-க்களுடனான ஆலோசனை கூட்டத்தை அண்மையில் மாமல்லபுரத்தில் முதல்வா் நடத்தினாா். அப்போது, அவா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில் கொளத்தூா் உள்பட 6 தொகுதிகள் இடைத்தோ்தல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

X