அண்ணன் சீர் செய்யவே முடியாது.. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 1.28 லட்சம் கடன் - சட்டசபையில் காரசாரம்

எவ்வளவு திட்டங்கள் செய்திருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்
சட்டசபை
சட்டசபை
Published on

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று முன் தினம் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து நேற்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ரகுபதி பேசுகையில்,

ஸ்டாலின்

எங்கள் தலைவர் எங்கே இருக்கிறார் என கேட்டவர்களுக்கு அதில் சொல்கிறேன். மகளிர் உரிமை வாங்கும் ஒவ்வொரு பெண்களின் உள்ளத்திலும் எங்கள் தலைவர் இருக்கிறார்கள். விடியல் பயணத்திட்டத்தில் இருக்கிறார்.

விடியலை நீக்கி விட்டீர்கள். ஆனால், விடியல் எங்களால் மீண்டும் கிடைக்கும். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அரைகுறையாத்தான் இருக்கிறது. முழுமை பெறவில்லை

அண்ணனின் சீர்

அண்ணனின் சீர் திட்டத்தை தவெக அரசால் செயல்படுத்த முடியாது. அண்ணனின் சீர் திட்டத்தை செயல்படுத்த 2000 கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் நீங்கள் அந்த திட்டத்திற்கு வெறும் 812 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளீர்கள்." என தெரிவித்தார்.

கடன்

இதைத்தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், ஸ்டாலின் எங்கெல்லாம் இருப்பார் என கூறினார்கள். தமிழகத்தில் ஒவ்வொருவரின் தலையிலும் 1.28 லட்சம் ரூபாய் கடனை விட்டுச் சென்றுள்ளீர்கள்" என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ கேஎன் நேரு, "நீங்கள் ஆட்சிக்கு வந்த பின் 20,000 கோடி கடன் பெற்றுள்ளீர்கள். எவ்வளவு கடன் என்பது அல்ல, எவ்வளவு வளர்ச்சி திட்டம் செய்யப்பட்டுள்ளது என்பதை தன் பார்க்க வேண்டும்.

60 நாட்களில் 21 ஆயிரம் கோடி கடன் வந்துள்ளது. அரசு முன்னேற்றத்திற்காக தான் கடன் வாங்குகிறது. எவ்வளவு கடன் வாங்கியுள்ளோம் என்பதை பார்க்காதீர்கள், எவ்வளவு திட்டங்கள் செய்திருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com