தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் ஆதரவு

தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது.
Thamimun Ansari- Jawahirulla
Published on: 

தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி

இந்நிலையில், தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கூறியதாவது:-

தொகுதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகிறது. அதே சூழல் இங்கும் வரும்.

மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு தேவை.

தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு மஜக ஆதரவு தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி

தொடர்ந்து, தொகுதிமறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு மமக ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும்,"2029 தேர்தலிலேயே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்க கூடாது" என்று மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com