நேபாளில் தவிக்கும் தமிழர்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம்: முதலில் உறுப்பினர்கள் பேச அனுமதிக்குமாறு அமளி

கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி
உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட காட்சி
Published on
Summary

சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

தமிழ்நாடு சட்டசபை ஒருநாள் விடுமுறை பின் இன்று கூடியது. சபை கூட்டத்தொடர் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நேபாளத்தில் பெரு வெள்ளம் தொடர்பாக விளக்கம் அளிக்க தொடங்கினார்.

அதற்கு நேபாளம் பெரு வெள்ளம் தொடர்பாக சபையில் கவன ஈர்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே அமைச்சம் விளக்கம் அளிப்பதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்,

நாட்டையே உலுக்கிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் முன்னால் பேசினால் என்ன, பின்னால் பேசினால் என்ன?. நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததால் தான் அமைச்சர் பதிலளிக்கிறார் என்பதல்ல என்றார்.

அதற்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் அமைச்சர் பதிலளிப்பது தான் முறையாக இருக்கும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசிற்கு கவனத்திற்கு கொண்டுவருவதற்கு முன்பே அமைச்சர் பதிலளிப்பதா?. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் அதன் பின்னர் விளக்கம் அளியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அதற்கு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பேசிய பின் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதில் ஒன்றும் தவறில்லையே என்றார்.

மேலும் கரூர் சம்பவம் நடந்தபோது இதே சபையில் முதலமைச்சர் பேசிய பின்னர் கேள்வி கேளுங்கள் என நடந்ததாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

இருப்பினும் சட்டசபையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சித் தலைவரே முதலில் பேசட்டும் என அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரைத்த நிலையில் சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com