திருவண்ணாமலை வரும் பக்தர்களை வழிநடத்த ஊழியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது.
Minister Vijay Tamizhan Parthiban
Published on: 
Summary

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மகாதீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், என்னென்ன சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதையடுத்து மாலை 6:00 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

பரணி தீபம் மற்றும் மகாதீப தரிசனத்திற்கு கட்டண முறை ரத்து செய்யப்பட்டு, 3,000 பேருக்கு இலவச ஆன்லைன் பதிவு மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் நாளை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கோவில் ஊழியர்களுடன் பேசிய அமைச்சர், மக்களுக்கு என்னென்ன தேவை என்று கேட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் செய்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக, நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் எங்கே செல்ல வேண்டும் என்று சொல்வதற்காக, சிவப்பு கேப் அணிந்த ஊழியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவல பாதைக்கு செல்வதற்கும், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலும் பிளெக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்தால் பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து அதில் காண்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X