

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாக்கம் அரசு பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை நாளான இன்று 4 மாணவிகள் மற்றும் மையத்தின் பாதுகாவலர் தேன்மொழியுடன் சமுத்திரம் ஏரியில் குழிக்க சென்றுள்ளனர்.
மாணவிகளில் 3 பேருக்கு நீச்சல் தெரியாது எனத் தெரிகிறது. திடீரென மாணவி ஒருவர் ஆழமான இடத்திற்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாத அந்த மாணவி தத்தளித்துள்ளார். நீச்சல் தெரியாத போதிலும் சக மாணவி தத்தளித்ததை பார்த்து ஒவ்வொரு மாணவியாக ஆழமான இடத்திற்குள் சென்று காப்பாற்ற முயன்றுள்ளனர். அவர்களும் தண்ணீர் மூழ்கி தத்தளித்தனர்.
இதைப்பார்த்த தேன்மொழியும் அவர்களை காப்பாற்ற சென்றுள்ளார். இறுதியில் 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த மாணவிகள் மற்றும் பாதுகாவலர் தேன்மொழி உடல்களை மீட்டு திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.