

போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கொருக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (70). மூதாட்டியான இவர் தனியாக வசதித்து வருகிறார்கள். இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 3 கிராம் தங்கம், மற்றும் பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். மூதாட்டி கன்னியம்மாள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் வீட்டின் பக்கவாட்டு சுவர்வழியாக ஏறிக்குதித்து உள்ளே நுழைவது பதிவாகி உள்ளது.
மேலும் அவர் கைரேகைகள் சிக்காமல் இருப்பதற்காக கையுறையும் அணிந்து இருந்தார். சட்டை அணியாமல் துண்டை மட்டும் உடலில் சுற்றி இருந்தார். மேலும் சிலர் கொள்ளையனுடன் வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.