திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on: 
Summary

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த பானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது33). தொழிலாளி. இன்று காலை வீட்டில் மின்சாரம் இல்லாத மின்வயரை சரிசெய்யும் பணியில் விநாயக மூர்த்தி ஈடுபட்டார்.

போலீசார் விசாரணை

அப்போது மின்சாரம் தாக்கியதில் விநாயகமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X