மோட்டார் சைக்கிள்கள் மோதல்- கல்லூரி மாணவர் பலி

விபத்தில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் பர்வீன் குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்- கல்லூரி மாணவர் பலி
Published on: 
Summary

மோட்டார் சைக்கிளில் மற்ெறாரு மோட்டார் சைக்கிளில் வந்த கோகுலகிருஷ்ணன், நிஷா மற்றும் ஒருவர் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

திருக்கழுக்குன்றம் அருகே எடையூர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பர்வீன் குமார் (வயது 17). திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது தாய் மற்றும் தங்கையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருக்கழுக்குன்றத்தில் இருந்து சொந்த ஊரான எடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நாவலூர் பகுதியில் திரும்பும் போது எதிரே 3 பேர் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென பர்வீன்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளோடு நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் பர்வீன் குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த மோட்டார் சைக்கிளில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கோகுலகிருஷ்ணன், நிஷா மற்றும் ஒருவர் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X