துடியலூர் பஸ்நிலையத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே சரிந்து விழுந்த மேற்கூரை

கனமழையால் திறப்பு விழா காண்பதற்கு முன்பே துடியலூர் பஸ் நிலையம் மேற்கூரை சரிந்து விழுந்தது.
துடியலூர் பஸ்நிலையத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே சரிந்து விழுந்த  மேற்கூரை
Published on: 
Summary

துடியலூர் பஸ்நிலைய பணிகள் முறைகேடு நடந்துள்ளதாக ஏற்கனவே பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் முக்கிய நகரமாக விளங்கும் துடியலூரில் புதியதாக துடியலூர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக பெய்த வரும் கனமழையால் திறப்பு விழா காண்பதற்கு முன்பே துடியலூர் பஸ் நிலையம் மேற்கூரை சரிந்து விழுந்தது. நல்லவேலையான அந்த நேரத்தில் பொதுமக்கள் அங்கு இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

துடியலூர் பஸ்நிலையம்

துடியலூர் பஸ்நிலைய பணிகள் முறைகேடு நடந்துள்ளதாக ஏற்கனவே பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்தநிலையில் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே பஸ்நிலையத்தை தரமானதாகவும், உறுதியாகவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com