நீலகிரி தொகுதியில் மும்முனை போட்டி - ஆ. ராசாவை எதிர்த்து களம் காணும் எல். முருகன்

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்
நீலகிரி தொகுதியில் மும்முனை போட்டி - ஆ. ராசாவை எதிர்த்து களம் காணும் எல். முருகன்
Published on

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார். இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. அவ்வகையில் ஆ. ராசா, எல். முருகன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com