அச்சுறுத்தும் புயல்..!- 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Cyclone alert
1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.
Published on: 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

வலுப்பெறும் புயல்

மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று நாளை புயலாக வலுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி

வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் அக்-28-ல் ஆந்திரக் கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்பு. புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

மழை தொடர்வதால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சுற்றுலாத் தலங்கள் மூடல்

திண்டுக்கல்லுக்கு நாளை (அக்.25) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப் பட்டதால்,

கொடைக்கானலில் உள்ள அனைத்து

சுற்றுலாத் தலங்களும் மூடல் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொடைக்கானல் மலை சாலையில் நாளை, நாளை மறுநாள் இரவு 10 மணிக்கு மேல் காலை 7 வரை பயணிக்க வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com