தொட்டியம் அருகே விவசாயி தற்கொலை

தொட்டியம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டியம் அருகே விவசாயி தற்கொலை
Published on: 
Summary

மரவள்ளிக்கிழங்கு சரியாக விளையாததால் ஏற்பட்ட மனவேதனையில் செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள நத்தம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). விவசாயியான இவர் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு இருந்தார். மரவள்ளிக்கிழங்கு சரியாக விளையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் வழக்குப்பதிவு

இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கு சரியாக விளையாததால் ஏற்பட்ட மனவேதனையில் செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

X