திருவட்டார் அருகே தொழிலாளி கொலை- அக்காள் மகன் வெறிச்செயல்

தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து அக்கம் பக்கத்தினர் திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
திருவட்டார் அருகே 
தொழிலாளி கொலை- அக்காள் மகன் வெறிச்செயல்
Published on: 
Summary

தலையில் கல்லை போட்டு கட்டிட தொழிலாளியை அவரது மருமகனே கொலை செய்த சம்பவம் திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள தேரிவிளை இலுப்பறக் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது52). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சென்னையில் ஒரு கம்பெனியில் துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமண மாகிவிட்டது.

ஒரு மகளான சந்தியா(27) குலசேகரம் அருகே கொச்சுட்டுபாறை தும்பகோடு பகுதியில் வசித்து வருகிறார். மற்றொரு மகளான சரண்யா மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.

வழிப்பாதை பிரச்சனை

ஜோதியின் வீட்டின் அருகே அவரது அக்காள் பாய் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக ஜோதிக்கும், அவரது அக்காள் குடும்பத்துக்கும் வழிப்பாதை சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் போது அவரது அக்காள் மகன் முருகேசன்(37) அங்கு சென்றிருக்கிறார். இவரும் கட்டிட வேலை தான் பார்த்து வருகிறார். அவர் வழிப்பாதை பிரச்சினை தொடர்பாக கேட்டு மாமா ஜோதியை தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்.

கொலை

மேலும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்திருக்கிறார். அது மட்டுமின்றி ஜோதியை கீழே தள்ளிவிட்டு, அவரது தலையில் பெரியகல்லை தூக்கி போட்டார். இதில் படுகாயமடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து முருகேசன் அங்கிருந்து தப்பியோடி தலைமறை வானார்.

போலீசார்

ஜோதி கொலை செய்யப்பட்டது குறித்து அக்கம் பக்கத்தினர் திரு வட்டார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்பு ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜோதி கொலை செய்யப்பட்டது குறித்து அவரது மகள் சந்தியா போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகேசனை தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலையில் கல்லை போட்டு கட்டிட தொழிலாளியை அவரது மருமகனே கொலை செய்த சம்பவம் திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X