

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் உள்ள பால் முகவரும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில இணைச் செயலாளருமாக இருப்பவர் பவுல் சந்தோம். இவரது பாலகத்தின் முன் இறக்கி வைக்கப்பட்டிருந்த பால் டப்புகளில் இருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் 20 லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகளை அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் சர்வசாதாரணமாக திருடிச் சென்று உள்ளனர்.
இந்த பால் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அதிகாலை வேளையில் காவல்துறையினரின் ரோந்து பணிகளை அதிகரித்து திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தி கூறியுள்ளார்.