இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடைசெய்ய பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது தவெக அரசு!

இடதுசாரிக் கட்சிகள் ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை, தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடைசெய்ய பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றது தவெக அரசு!
Published on

இடதுசாரி கட்சிகளின் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய உத்தரவை தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றுள்ளது.

மாணவர்கள் சார்ந்தப் பிரச்னைகளிலும், சில பொதுப் பிரச்னைகளிலும் இடதுசாரிகளின் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொண்டு போராடுவது வழக்கம்.

சமீபத்தில் கூட நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக இடதுசாரிகள் தரப்பில் சென்னையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதிலும் மாணவர்கள் அமைப்புகள் கலந்துகொண்டன.

இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி கட்சிப் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை விடுத்தது.

இதற்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு கரப்பான்பூச்சி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவு “அரசியலமைப்புக்கு விரோதமானது” என்றும், இது தவெக அரசின் “தர்க்கமற்ற” மற்றும் “பகுத்தறிவற்ற” முடிவு என்றும் விமர்சித்திருந்தார்.

முன்னதாக, நேற்று திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடதுசாரிகள் உறுப்பினர்கள் குறித்த தகவல்களை திரட்ட வட்டாட்சியர் உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com