‘தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு தந்துள்ளனர், தவெகவிற்கு மட்டுமல்ல’ - வானதி சீனிவாசன்

தமிழ்நாடு மக்கள் திமுக, அதிமுக, பாஜக, விசிக என அனைவருக்கும் வாய்ப்பு தந்துள்ளதாக பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
‘தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு தந்துள்ளனர், தவெகவிற்கு மட்டுமல்ல’ - வானதி சீனிவாசன்
Published on

சென்னையில் பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“தமிழ்நாடு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காதநிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.

இத்தேர்தலில் எல்லோருக்கும் மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். அதனால் முழுவதுமாக ஒரு பக்கத்திற்கு தமிழ்நாடு சாய்ந்துவிட்டது என சொல்லமுடியாது. பிரதமர் மோடி லட்சக்கணக்கான கோடிகள், நூற்றுக்கணக்கான திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தந்துள்ளார். அதனை எப்போதும் தமிழ்நாடு மக்களிடம் எடுத்துசெல்வோம்.

வெற்றித், தோல்வியை பார்த்து அரசியல் செயல்பாடுகளை தீர்மானிக்கும் கட்சி அல்ல பாஜக. மக்களுக்காக இருப்போம், மக்களுக்கான உழைப்போம்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com