

தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போதுவரை இருதொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெக கிட்டதட்ட 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்த நிலையில், தற்போது தவெக முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இத்தேர்தல் முடிவுகள் முன்னரே தெரிந்தவையே என சிபிஐ தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டன. இடதுசாரிகள் ஒரு அரசியலுக்காக இயங்கி வருகிறோம். எங்களுக்கு கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள்.
தேர்தல் முடிவுகளை மதிக்கிறோம். சாதி, மதம், பணம் ஆகியவற்றை முன்னிறுத்தியதாக தேர்தல் இருக்க கூடாது.
இடதுசாரிகளை சட்டமன்ற எண்ணிக்கையில் தேட வேண்டாம். எங்களுக்கு மரணமும் கிடையாது, தோல்வியும் கிடையாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.