உங்கள் மீதுதான் மொத்த தமிழ்நாடே நம்பிக்கைக் கொண்டுள்ளது- மாணவர்களிடையே முதலமைச்சர் விஜய் பேச்சு

நான் அரசியல் பேசவோ, ஒட்டு கேட்கவோ விருது வழங்கும் விழாவுக்கு வரவில்லை.
TN CM Vijay
Published on: 

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தந்தார். மாணவர்கள் முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

பின்னர் முதலமைச்சர் விஜய் மேடையில் அவர் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான செல்லங்கள், நண்பா நண்பீஸ்க்கு எனது அன்பான வணக்கம்.

இந்த மேடைக்கான வலிமை வாய்ந்த அடித்தளம் மாணவ மாணவிகளாகிய நீங்கள் தான்.

இந்த தருணத்தை எனக்கு தந்த கடவுளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த இடத்திற்கு பெரிய பொருப்பில் உள்ள முதலமைச்சராக நான் வரவில்லை. உங்களது அண்ணனாக வந்துள்ளேன்.

நான் அரசியல் பேசவோ, ஒட்டு கேட்கவோ விருது வழங்கும் விழாவுக்கு வரவில்லை.

உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக உங்கள் வாழ்க்கையை மாற்றி கொள்ளுங்கள், உங்களை நம்பி தான் பெற்றோர் உள்ளனர்.

உங்களை நம்பி தான் நானும் உள்ளேன். இந்த சமூகமும் உள்ளது. மொத்த தமிழ்நாடே உங்களை நம்பி தான் உள்ளது.

மாணவர்கள் அனைவரும் உங்களுக்கான தனத்தன்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்.

உங்களை தடுக்க முயற்சிகள் நடக்கிறது என்றால் நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களுக்கானதை செய்வதற்காக தான் உங்கள் அண்ணன் நான் வந்துள்ளேன். ஊழல், போதைப்பொருள் பக்கம் செல்லாதீர்கள்.

எந்த தவறுக்கும் அடிமையாகி விடாதீர்கள். நீங்கள் நலமாக இருந்தால் உங்கள் அருகில் உள்ளவர்களும் நலமாக இருப்பீர்கள்.

இந்த பிணைப்பு என்றுமே தொடரும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் கான்பிடன்டாக இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X