தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டையில் 9 செ.மீ. மழை பதிவு

பலத்த மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டையில் 9 செ.மீ. மழை பதிவு
Published on: 
Summary

தாமரைப்பாக்கத்தில் 9.4, ஊத்துக்கோட்டையில் 8.7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலைவரை நீடித்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக தாமரைப்பாக்கத்தில் 9.4, ஊத்துக்கோட்டையில் 8.7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழை

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீட்டரில்) வருமாறு:-

சோழவரம் - 76, செங்குன்றம் - 72, பூண்டி - 61, கும்மிடிப்பூண்டி - 60, பொன்னேரி-59, பூந்தமல்லி - 54.4, திருவள்ளூர் - 51, ஜமீன்கொரட்டூர் - 28, ஆவடி -16, திருத்தணி - 12.5, பள்ளிப்பட்டு -12, திருவாலங்காடு -8, ஆர்.கே.பேட்டை - 6.5.

X

Maalai Malar
www.maalaimalar.com