ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: உண்மை நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை- அமைச்சர் அருண்ராஜ்

நீதிபதி பேசிய விஷயங்கள் குறித்து தான் கருத்து சொல்ல முடியாது.
minister arunraj
Published on: 

பெண் கலெக்டருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய விவகாரம் தொடர்பாக எழுப்பபட்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நீதிபதி பேசிய விஷயங்களுக்கு கருத்து சொல்ல முடியாது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத் தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக மனநல சேவைகள் மற்றும் மேம்பாடு குறித்த கருத்த ரங்கத்தை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது

மனநலம் பாதிக்கப்பட்ட வர்க–ளுக்கு முதலில் அவர்கள் குடும்பத்தினர் உடன் நிற்பது தான் முக்கியம், அதன் பிறகு இந்த சமூகம் அவர்கள் பக்கம் நிற்க வேண்டும்.

இதனை முறையான சிகிச்சைகள் மூலம் சரி செய்ய முடியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு அந்த நோய் இருப்பதே தெரியாது. அவர்களால் தொடர்ந்து அந்த சிகிச்சைக்–கான மாத்திரைகளை தனியாக எடுத்து கொள்ள முடியாது என்று தெரிவித்தார்

உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கேள்வி:- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ. ஆபாச குறுந்தகவல் அனுப்பியது குறித்து பெண் நீதிபதி கண்டனம் தெரிவித்து பேசி இருக்கிறார் என்ற நீதிபதியின் கேள்விகளுக்கு நீதிபதி பேசிய விஷயங்கள் குறித்து தான் கருத்து சொல்ல முடியாது.

அந்த நிகழ்வு குறித்து பலமுறை நான் ஏற்கனவே பேசி விட்டேன். அது முதலமைச்சரின் கவனத்தில் இருக்கிறது.அதில் ஆராய்ந்து உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் ஆளுங் கட்சியில் இருப்பவர்களுக்கு அறிவு இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். தேர்தலில் பல லட்சம் ரூபாய் செலவு தான் தி.மு.க. வென்று உள்ளது. ஆனால் த.வெ.க. ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் வெற்றி பெற்று உள்ளோம். தி.மு.க. தான் சமூக நோய், சமூக கேடாக உள்ளது.

என்று அவர் தெரிவித்தார்.

X