திருவள்ளூர் மாவட்டத்தில் மழை புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அறிவிக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை புகார்களுக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
Published on: 
Summary

மழை பாதிப்புகளைத் தெரிவிக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பல தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்களை பயன்படுத்தி தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மழை தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பொதுமக்கள் 044-27664177, 044-27666746, 044-27660035, 044-27660036 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.

மேலும், வாட்ஸ்அப் மூலமாகப் புகார்களைத் தெரிவிக்க 9444317862, 9498901077 ஆகிய எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com