அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் கத்தியால் குத்திக்கொலை

கோழிப்பண்ணையில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on: 

அரியலூர் மாவட்டம் பெரிய திருகோணம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 50). இவர் கல்லகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

ஆசிரியர் கொலை

இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரியம்மாபாளையம் சாலையில் உள்ள தனது உறவினர் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதுபோல் புகழேந்தி அந்த கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோழிப்பண்ணையில் புகழேந்தி கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார்

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், குன்னத்தை சேர்ந்த மணிகண்டன்(35), சிவசூரியா (30) மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகிய 3 பேர், புகழேந்தியை கோழிப்பண்ணையில் துரத்தியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் புகழேந்தியை கொலை செய்தனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலைவீச்சு

இதையடுத்து, மணிகண்டன், சிவசூரியா, நவநீதகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டு விசாரணை நடத்தப்பட்ட பின்னரே, புகழேந்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கோழிப்பண்ணையில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com