தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம்: தவெக குறித்து அவதூறு? சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் துரைமுருகன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம்: சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!
Published on: 

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சியை தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைத்து அவதூறாகப் பேசியதாக யூடியூபர் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ‘சாட்டை’ துரைமுருகன் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆலந்தூரைச் சேர்ந்த தவெக நிர்வாகி நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீனாட்சிக்கு தவெகவுடன் தொடர்பு இருப்பதாக, நவ.14 அன்று தனது சாட்டை யூடியூப் சேனலில் பதிவேற்றிய வீடியோவில், துரைமுருகன் குறிப்பிட்டிருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவிற்கும், மீனாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் துரைமுருகன் பொய் தகவல்களைப் பரப்பியதாக நந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் துரைமுருகன்மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X