

சட்டசபையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி பேசினார்.
அப்போது சவுமியா அன்புமணி கூறியதாவது:-
தமிழ்நாட்டின் நீர்வளம் நம் கையைவிட்டு போய்க்கொண்டு இருக்கின்றன. நீர் வளம் தான் எதிர்கால தலைமுறைக்கு நாம் வழங்கும் சொத்து.
இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
சென்னைக்கு வந்த பிறகு தான் கூவம் சாக்கடையாக மாறுகிறது. கூவத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
நல்ல தண்ணீரில் சாக்கடையை கலப்பது சட்டப்படி குற்றம்.
தாமிரபரணி நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கட்டிடங்கள் ஏரியில் தான் அமைந்துள்ளன என்றார்.
அப்போது பேசிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்,"சவுமியா அன்புமணி கோரிக்கையின் படி நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்படும்" என்றார்.
அத்திக்கடவு- அவிநாசி 2 திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும்.
காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். பாலாற்றில் 5 அடிக்கு தடுப்பணைகளை கட்ட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்.
தருமபுரியில் குறும்பர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்கள் SC சான்றிதழ் கேட்டு வருகின்றனர். அவர் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்று ஆர்டர் வாங்கி வந்து விட்டு படிக்கிறார்கள். அதனை பரிசீலனை செய்து வழங்க வேண்டும்.
குறும்பர் இன மக்களுக்கு SC சான்றிதழ் - இதுதொடர்பாக அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.