தமிழகத்தில் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது.
exam
Published on
Summary

காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

3 முதல் 10-ம் வகுப்பு வரை செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

11, 12-ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குப் பிறகு செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com